Perippa

மழை கழிந்த ஒரு மாலை வேளை

புல்லுக்கு மூக்குத்தி அணிவித்து

வளைந்து நீண்ட கோரைக்கு முத்துச்சட்டம் சூட்டி நின்றது தூறல்

சின்னக்காற்று - முத்தமிட மகிழ்ச்சியாய் பன்னீர்த்த்ளித்தது மரம்

கொக்கு பூத்து நின்ற குளக்கறையோ

பொன்னை வாரிப் பூசிக்கொண்டது

எங்கள் அடுப்புகளை அணைத்துவிட்டு

வயிறுகளை எரியவிட்டுச்சென்றது மூன்று நாள் மழை

(Diary 20 April 1999)

அநியாயக் கொலைகள்

இமை மூடித் துயில் கொள்ளும் தாமரைப் பூ

விழித்தபடி தூங்கி நிற்கும் அல்லி மலர்

வெண்ணிலவைத் தாலாட்டும் குளிர்ப் பொய்கை

கரையின் வெப்பத்தைத் தொட்டு துடைக்கும் ஏரிநீரில்

விண்மீன்கள் தலை முழுகும் ஒரு நள்ளிறவில்

கிழக்கு புற வாய்க்கால் கரையோரம் இரு மனித உயிர்கள்!

தட்டித் தட்டிப் பார்த்தும்

சமூகத்தின் கதவுகள் இறுக தாழிட்டுக் கொண்டதால்

பாலிடால் அமுத பானமானது!!

விடிந்ததும் காதுகளில் நிச்சயம் ஒளிக்கும்

ஐயைய்யோ

இப்படீண்ணு தெரிஞ்சிருந்தா

சேத்துவச்சி பாத்திருப்போமே

என்ற பெற்றவர்களின் கூக்குரல்

(Diary 21 April 1999)

அழுகையில் ஆறுதல்

இழப்பின் துக்கம் எப்பக்கம் திரும்பினாலும்

உலகம் அந்தயமானது என இழப்பின் மத்தியில் தான் உணர முடியும்

பத்து மரனங்களைக்கண்டார் யோபு ஒரே நாளில்

உதடு முனுமுனுக்கவில்லை

குழந்தையின் விளையாட்டு காரொன்று நொருங்கியது

குழந்தை வருத்தப்பட்டது - ஆனால்

தந்தையால் பத்து கார் வாங்கித்தர முடியுமென உனர்ந்து விட்டால் அழுமா?

(Diary 16 May 1999)

ஒரு பொருட்டா

உன் உடலில் ஒரு நாற்றம் வந்தால் நீ உன் உடலை வெருத்து விடுவாயா?

அதோ என் மக்க்ள், அழுக்காய் இருக்கிறார்கள்,

உன் அன்பிற்காய் மிகவும் ஏங்குகிறார்கள் உனக்குரியவர்கள்

நீ வார்த்தை பாடு தந்தாய்

"வாழ்வது நானல்ல, என்னில் யேசு" (கலா: 2:20)

(Diary 18 May 1999)

புனிதமானது தான்

அன்பு

அன்பு புனிதமானதுதான்

"அனைவரும் சமம்" என்ற வேசம் இல்லா நேசம் உள்ள வரையில்.

நட்பு

நட்பு புனிதமானதுதான்

இன்பத்தில் மட்டும் அல்லாது துன்பத்திலும் துள்ளி வருகின்ற பாசம் உள்ள வரையில்.

உறவு

உறவு புனிதமானதுதான்

உள்ளதை வைத்தல்லாமல் உள்ளத்தை வைத்து உறவாடும் வரையில்.

வாழ்க்கை

வாழ்க்கை புனிதமானதுதான்

லட்சத்திற்கு வாழாமல் இலட்சியத்திற்காக வாழும் வரயில்.

இல்லறம்

இல்லறம் புனிதமானதுதான்

ஒருவன் ஒருத்தி என்ற பன்மையில்லா ஒருமை உள்ள வரயில்.

காதல்

காதல் புனிதமானதுதான்

காதலும் காமமும் ஒன்றையொன்று காதலிக்காவரயில்.

(Diary 22 May 1999)

சுடர் விடும்

கவலை கசப்புதான்,

அதை ஜீரணித்தால் ஆனந்த ருசி!

அலைச்சல் அசதிதான்,

அது முடிவுற்றால் ஆனை பலம்!

வேகத்தடை தடுக்கும் கொஞ்சம்,

நிதானித்தால் விபத்து இல்லை!

தோல்வி சகஜம் தான்,

மனத்துணிவு இருந்தால் சுகந்தம் வரும்!

சோதனைகள் தேவைதான்,

அவை சுட்டால் தான் சுக வாழ்க்கை சுடர்விடும்!

(Diary 23 May 1999)

இறை வார்த்தை

இறை வார்த்தை

  • வாழ்வளிக்கும் வார்த்தை (யோவான் 6:6, 7:63, நீதிமொழி 4:20-22, எபி 4:12)
  • உண்மையான ஒளி (யோவான் 1:9, 2 பெதுரு 1:9, திருப்பா 119:105)
  • வாழ்வளிக்கும் உணவு (இ.ச 8:3, மத் 4:4, எசே 3:2-3)
  • குணமளிக்கும் வார்த்தை (நீதிமொழி 4:22, திருப்பா 107:2)
  • பலன் தரும் வார்த்தை (எசாயா 55:10-11, திருப்பா 1:2-3)
  • நம்மை நற்பேறு பெற்றவர்களாக்கும் வார்த்தை (தி. வெ 1:3, திருப்பா 1:12)
  • நம் உள்ளங்களில் எழுதப்ப்டும் வார்த்தை (எரே 31:3, திருப்பா 119:1)
  • எல்லோருக்கும் எக்காலமும் உரியது (யோவான் 13:34-35, 15:12, உரோ 5:5, லூக்கா 6:27-28)
  • ஒவ்வொரு நாளுக்கும் உரியது (திருப்பா 1:2, 119:11, 16)

உமது வார்த்தையில் நிலைத்திருந்து தினமும் கனி கொடுக்க என்னை ஆசீர்வதியும் - ஆமென்.

(Diary 4 June 1999)

வேதாகமம் என்பது

ந்மக்கு விடுதலை தரும் வாள்

நம்மை கண்டித்து சீர்திருத்தும் கைத்தடி

ந்மக்கு கொடுக்கப்பட்ட சிறந்த கொடை

புனித வனத்த அந்தோணியார் புனிதரானதற்கு காரணம் மத் 19:16

புனித அகுஸ்தினார் புனிதரானதற்கு காரணம் உரோ 13:12, 74

புனித சவேரியார் புனிதரானதற்கு காரணம் மத் 16:26

ஆகவே வேதாகமத்தை எடு, படி, அதன் படி நட.

(Diary 9 June 1999)

வேதாகமத்தை படிப்பது எப்படி?

1. உனக்கென சொந்தமாக ஒரு பிரதி

2. தினமும் வாசிப்பேனென்ற தீர்மான்ம்

3. நாளின் மிக உற்சாகமான் நேரத்தை வேதாகமம் வாசிக்க குறித்துக்கொள்

4. முடிந்தளவு இடைஞ்சல், தொந்தரவு, பராக்கில்லா இடம்

5. உன் உள்ளத்தை தொட்ட பகுதியை குறித்துக்கொள்

6. புறியாவிட்டால் பங்குதந்தையிடம் கேள்

7. வாசிப்பு, தியானம் முடிந்த பின், வாசிக்கப்பட்ட பகுதியின் பொருளுக்கேற்ப ஆராதனை கொள்ளலாம்

8. நன்றி கூறியோ பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டோ செபம் செய்

9. தேவை பட்டால் தொடர்புள்ள பாடல் படி

10. உள்ளத்தை தொட்ட வார்த்தை, வசனங்களை மனப்பாடம் செய்து ஒரு நோட்டில் எழுதி வா

11. இன்று படித்த பகுதி எனக்கு விடுக்கும் பாடம், சவால் என்ன என்று தெளிவுபடுத்திக்கொள்

12. உன்னைப்போல் ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்து, நற்செய்தி பணியை தொடங்கி தொடர்ந்து செய்

13. வாசிக்காமல் தினங்கள் பாக்கி படுமாயின் வைராக்கியத்துடன் பாக்கியை வாசித்து நிறைவு செய்து விடு

சாப்பிட மறந்து போனாலும் போ, ஆன்மாவை பட்டினி போட்டு விடாதே

(Diary 7 -8 June 1999)

உண்மை

உண்மையின் கசப்பை இன்று நீ ஏற்க மறுத்தால்

பொய்யின் இனிமை நாளை உன் வாழ்வை கசப்பாக்கும்.

அலைகள்

அலைகளைக்கண்டு அஞ்சி நிற்பவன்

ஆழங்களின் அருஞ்செல்வத்தை காணமாட்டான்.

(Diary 7 June 1999)

இறப்பதற்கு பயமா?

கப்பலில் பயணம்

மாலுமியிடம் ஒரு கேள்வி

உன் தந்தை இற்ந்த இடம் கடல்,

தந்தையின் தந்தை அதுவும் கடல்,

பாட்டனார் முப்பாட்டன் அதுவும் கடல்.

நாள்தோறும் நல்மரண செபம்

மாதம் ஒருமுறை நல்மரண ஆயத்தம்

பயம் ஏன் வரும்?

You are ever ready!

(Diary 13 September 1999)

வென்பனி

வென்பனி போன்ற உள்ளம் இல்லையெனில் மன்றாடு இறைவனிடமே

சாக்கடையில் ஒரு பனிதுளி விழுந்தது

தாளாத துன்பத்தில் தூய்மையாக்கிட தூயவனிடம் வேண்டியது

உடனே இறைவன் சூரிய கதிரை அனுப்பி மேகமாக்கி தன்னிடமே வைத்துக்கொண்டார்.

இறைவா என்னை மன்னியும்

நான் உறைபனியிலும் வென்மையாவேன்

என்றுமே நீ என்னிடம் இருப்பீர்

அப்போது அது சொர்கமே!

(Diary 26 December 1999)

கவனமாயிரு...

உன் எண்ணங்களில் கவனமாயிரு

எண்ணங்கள் வார்த்தைகள் ஆகும்

உன் வார்த்தையில் கவனமாயிரு

வார்த்தைகள் செயல்கள் ஆகும்

உன் செயல்களில் கவனமாயிரு

செயல்கள் பழக்க வழக்கங்கள் ஆகும்

உன் பழக்க வழக்கங்களில் கவனமாயிரு

பழக்க வழக்கங்கள் குணநலம் ஆகும்

உன் குணநலங்களில் கவனமாயிரு

குணநலங்கள் உன் எதிர்காலமாகும்.

(Diary 27 December 1999)

தர்மதலைவன் யேசு

இரக்கத்தில் இமையம்

கருணையில் கடல்

தருமத்தில் வானம்

வாழ்ந்து காட்டிச்சென்றாய் நீ

யேசு வழி வாழ, பழகிட பலம்தருவாய்!

(Diary Front back cover 2006)

அன்பின் அலைகள்

கரையோரமுள்ள ஒரு மரத்தின் பழம் குளத்தில் விழுகிறது

ஒரு சிரிய அலை வட்டம் நீரில் பரவி கொஞ்சம் பெரிதாகுகிறது,

முடிவில் நீருடனேயே கலந்து விடுகிறது

வீட்டில் தொடங்கும் அன்பு வீதியில் பரவி நாட்டில் படர்ந்து செழிக்க வேண்டும்

பரந்து விரிந்து அன்பினால் பரமனை அடையலாம்.

(Diary Initial pages 2006)

கலங்கரை விளக்கு

இளமை காலத்திலே ஞான நூல்களை பயில வேண்டும்

இறைதொண்டுகளில் ஈடுபட வேண்டும்

இளமை போல் முதுமையில் எடுப்பாக செயலாற்ற முடியாது

இளமை பக்தி கலங்கரை விளக்கமாகும்

(Diary Initial pages 2006)